புகழ் பெற்ற பாகிஸ்தான் பந்துவீச்சாளர் திடீர் மரணம்!

1980 மற்றும் 90களில் ஆசிய அணி அல்லாத வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் ஆசிய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணி பாகிஸ்தான் அணியாக இருந்தது.  இம்ரான் கான், வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ் என வேகப்பந்து கூட்டணியை கொண்ட பாகிஸ்தான் அணியுடன், அப்பொழுது அவர்களுக்கு பவுலிங் படையை பலப்படுத்தவே, உலகப் புகழ் பெற்ற அப்துல் காதீர் சுழற்பந்துவீச்சாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அறிமுகமான போட்டியில் வக்கார் யூனிஸ் வாசிம் அக்ரம் இம்ரான் கான் அப்துல் காதிர் ஆகிய நால்வரும் தான் முதன்மைப் பவுலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளிலும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அப்துல்காதிர் டெஸ்ட் போட்டிகளில் 236 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 132 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவருடைய பௌலிங் ஸ்டைலுக்கு மிகவும் புகழ் பெற்ற அவர் விளங்கினார்.

1977 ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 1993 ஆம் ஆண்டு வரை 16 வருடம் விளையாடியவர், ஆயிரத்து 93 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவுக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு அறிவித்தார். அதன்பிறகு பாகிஸ்தானில் வாழ்ந்து வந்த அவர் இன்று திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்து விட்டதாக அவருடைய மகன் தெரிவித்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார். அவருடைய மறைவுக்கு ஐசிசி உட்பட கிரிக்கெட் உலகின் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வயது 63 ஆகும்.