தாம்பத்தியத்தில் இதனை மட்டும் செய்யுங்கள்..!

தாம்பத்தியம் என்பது ஆபாசமானது கிடையாது. அதுவும் ஓர் உணர்வு. தனது துணையுடன் சேர்ந்து உணர்வை வெளிப்படுத்தி., அமைதியான முறையில் இந்த செயல்முறையை செயல்படுத்தாவிடில் பெரும் கசப்பு தான் மிச்சமாக இருக்கும். இன்றுள்ள பலர் இந்த விஷயத்தில் தவறுதலாக சில செயல்களை செய்வது உண்டு., அவ்வாறு செய்யப்படும் தவறுகள் என்ன? அதனை எப்படி மனதுடன் ஒத்துழைத்து நிறைவேற்ற வேண்டும் என்று இனி காண்போம்.

தாம்பத்தியத்தில் பெரும்பாலனோர் எடுத்த எடுப்பிலேயே பணியை துவங்குகின்றனர். அது தான் தவறான விஷயம். முதலில் அதிகளவு முத்தங்களை துணைகள் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டு., நினைக்கும் இடமெல்லாம் முத்த மழைகளை பொழியவைத்து., இருவருக்கும் இடையே இருக்கும் அன்பை அதிகரிக்க செய்ய வேண்டும். இந்த முத்த பரிமாற்றத்தின் மூலமாக இருவருக்கும் இடையே இருக்கும் அளவுகடந்த அன்பானது அதிகரிக்கும்., அதே வேளையில் உணர்ச்சியும் அள்ளி எறியப்படும்.

இந்த முத்த மழைகளுக்கு பின்னர் கலவியின் இன்பமானது வரவேண்டியது கட்டாயம். தேவையற்ற அவசரம் இந்த இடத்தில் கூடவே கூடாது. துணையுடன் முன் விளையாட்டுகளை செய்து., பின்னர் மெல்ல துவங்க வேண்டும். முன் விளையாட்டின் போது உணர்ச்சிகள் ஏற்படுத்தாத இடங்களை தொட்டு ஒரு பயனும் இல்லை., உங்களின் துணை எந்த இடத்தில் தொட்டால் தனது இயல்பில் இருந்து மாறி., சிணுங்கலை வெளிப்படுத்துகிறாரோ., அந்த இடத்தில் தொட்டு உணர்ச்சியை அதிகரிக்க செய்ய வேண்டும்.

பொதுவாக ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் கழுத்து., காது., முதுகு மற்றும் வயிறு அதிகளவு கிளர்ச்சியை கொண்டிருக்கும். இதனைப்போன்று இருபாலரும் தங்களின் உறுப்புகளை மாற்றி கிளர்ச்சியை ஏற்படுத்தி கொள்ளலாம். பெரும்பாலான ஆண்கள் தங்களின் துணையை அப்படியே அலேக்காக தூக்கி., அவர்களை படுக்கையின் மீது வைத்து அவர்களின் மீது அழுத்தத்தை தருவார்கள்., சற்று சிந்திக்க வேண்டும். உங்களின் எடையை உங்களின் துணையால் தாங்க முடியுமா? என்று யோசனை செய்து கொள்ள வேண்டும்.

என்றுமே பெண்களை பூ போல நினைத்து பொறுமையுடனும்., நிதானத்துடனும் கையாள வேண்டும். இன்றுள்ள பெரும்பாலான ஆண்களின் சில செயல்களால் இறுதிக்கட்டம் விரைவாக எட்டிவிடும். ஆனால் பெண்களுக்கு இறுதிக்கட்டம் அல்லது உச்சக்கட்டம் எட்டுவதற்கு நேரம் எடுக்கும். இந்த சமயத்தில் உங்களை போலவே உங்களின் துணையும் உச்சத்தை பெறுவதற்கு வேகத்தை குறைத்தும்., அதிகரித்தும்., சற்று விவேகத்துடனும் செயல்பட வேண்டும். உயிரணுக்கள் சற்று தாமதமாக வெளியேறவும்., உங்களின் துணை உச்சத்தை அடைவதற்கும் சில வழிமுறைகள் உள்ளது.

தாம்பத்தியத்தின் போது உயிரணுக்கள் சில சமயத்தில் அதிவேகத்துடன் வெளியேறும் சூழல் ஏற்படலாம். இந்த செயலானது துணைக்கு சில எரிச்சலை ஏற்படுத்தும். இதனால் அவ்வுளவுதானா? என்ற கேள்வியை அவர்கள் முன்வைக்க நேரிடலாம். இந்த நேரத்தில் எனது உச்சம் எட்டப்பட்டு விட்டது., உயிரணுவை வெளியேற்றி விடவா? என்று கேட்டு செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் தாம்பத்தியத்தை ஆபாசமாக நினைக்காமல்., கொஞ்சம் உங்களின் துணைக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டுமாம். எதை செய்தாலும் உங்களின் துணையின் விருப்பத்தை அறிந்து., அதனை அவர்களும் ரசிக்கும் படி செய்ய வேண்டும்.

இந்த சமயத்தில் அந்த படத்தில் அப்படி செய்தார்கள்., இந்த படத்தில் இப்படி செய்தார்கள்., இன்று இவ்வாறு செய்வோம் என்று தேவையற்ற செயல்களை செய்வது உயிரிழப்புகளை கூட ஏற்படுத்தலாம். அந்த ஆபாச காட்சிகளில் உள்ள அனைத்தும் எடிட்டிங் மற்றும் அந்த காட்சிகளில் நடிக்கும் கலைஞர்களுக்கு சில சிகிச்சைகள் செய்த பின்னரே அவர்கள் நடிக்கிறார்கள்., அவர்களின் உணர்ச்சிகளின் வாய் அசைவுகள் மற்றும் சத்தங்களை நம்பி மரணத்தை ஏற்படுத்திவிடாதீர்கள்.