நிம்மதியை கெடுக்கும் தகாத உறவுகள்.!

நமது துணையின் தகாத உறவு குறித்து தெரிய வருவதும், அதனை எதிர் கொள்வதும் மிகவும் பயங்கரமான அனுபவம். அது உணர்ச்சிகளை கொந்தளிக்க செய்கின்ற அனுபவமும் கூட. அப்படி தகாத உறவு இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டவுடன், அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இது உண்மையா? பொய்யா என்ற மனப் போராட்டத்திற்கு விடை காண்பதே மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்த கூடிய விஷயம்.

சில தகாத உறவுகள் ஆரம்பித்தவுடனேயே விரைவில் தெரிந்துவிடும். அதனை உறுதிப் படுத்த ஆதாரங்களும் கிடைத்து விடும். ஆனால், சில நேரங்களில் அந்த உறவுகளை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான விஷயமாக இருக்கும். பத்து, பதினைந்து வருடங்கள் கடந்தும் கூட அதனை கண்டு பிடிக்க முடியாத குடும்பங்களும் இருக்கின்றது. அதை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது எதிர்காலம் அமைகிறது.

ஏற்கனவே, நாம் பார்த்த மாதிரி துணையிடம் காணப்படுகின்ற திடீர் நடத்தை மாறுபாடுகள் அல்லது அவரது பழக்கவழக்கங்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் அல்லது உறவுகளிடம் இருந்து சற்று விலகி இருப்பது போன்ற மனப்பான்மை, தகாத உறவுக்கான முதல்ல அறிகுறிகளாக இருக்கும். கணவன் மற்றும் மனைவி இருவருமே வேலையில் மிகவும் பிஸியாக இருந்தார்கள் என்றால் ஒருவருக்கு ஏற்பட்ட தகாத உறவை மற்றொருவரால் அவ்வளவு எளிதில் அறிந்து கொள்ள முடியாது.

சில பெண்களுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்ததும், கணவனுக்கான கவனிப்பும், நேரமும் குறைந்துவிடும். கவனம் மொத்தமும் குழந்தைகள் பக்கம் இருப்பதன் காரணமாக அந்த மாதிரியான சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொண்டு கணவர் திடீரென கிடைக்கும் தேவையற்ற உறவுகளிடம் ஐக்கியமாகி விடுவர். குழந்தையிடம் பிஸியாக இருப்பதால் தங்களுக்கு அந்த தேவையற்ற உறவு குறித்து அறிய வாய்ப்பே இல்லாமல் போகலாம்.

இந்த மாதிரியான விஷயங்கள் பல நேரங்களில், அக்கம்பக்கத்து வீட்டினர், நண்பர்கள், வேலை செய்கிறவர்கள் என முன்பின் அறியாதவர்கள் மூலமாகத்தான் நாம் அறிந்துகொள்ள வேண்டிய இருக்கும். இருந்தாலும், இதுபோன்ற தகாத உறவுகளை காட்டிக் கொடுப்பதில் கணவரின் மற்றும் பேண்ட் பாக்கெட்டுகளில் அவர்களின் செல்போன்களும் அழிக்கப்படாத கால் ஹிஸ்டரி மற்றும் எஸ்எம்எஸ்களும் நமக்கு முக்கிய சாட்சியாக அமைகின்றது.

என்ன தான் மற்றொரு துணையுடன் உறவு வைத்திருக்கும் சிலர் மனைவியிடம் இருந்து விலகி இருப்பது அல்லது கவனிப்பு தன்மையற்றது போன்ற செயல்களில் ஈடுபடுவது போன்று இருப்பவர் என்பது பொதுவான உதாரணமாக கூறப்பட்டாலும்,

ஒரு சிலர் தங்களது துணைக்கு துரோகம் செய்கிறோம் என்ற மன நிலையில் இருப்பதன் காரணமாக துணையின் மீது அதீத அன்பும், ஈடுபாடும், அதிகப்படியான பரிதாபம் கொண்டும் அவர்களிடம் ஒரு பரிதாப மனப்பான்மையுடன் உறவில் இருப்பர் என்கிறது ஆய்வு.

எனவே,கவனிப்பு தன்மை குறைந்து விட்டதன் காரணமாக மட்டும் நீங்கள் சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை. என்னதான் சந்தேகப்படுவது தவறான விஷயம் தான் என கூறப்பட்டாலும், கணவன் என்ன செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ளாத அளவுக்கு பிஸியாக இருப்பது முட்டாள்தனம் தான்.