ரணில் குழுவை வரவேற்றார் மாலைதீவு ஜனாதிபதி!

பிரதமர் ரனில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக்குழுவினர் மாலைதீவை சென்றடைந்தனர். அவர்களை மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலி வரவேற்றார்.

பிரதமரின் இந்த பயணத்தின்போது, சமூக பாதுகாப்பு, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் மேம்பாடு மற்றும் உயர் கல்வி குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் விசா ஏற்பாடுகள் குறித்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்படும்.

இந்த ஆண்டு இந்தியப் பெருங்கடல் மாநாட்டிற்கு பிரதமர் ரணில் தலைமை தாங்குவார். நாளை இந்த மாநாடு தொடங்குகிறது. இதுதவிர, மாலைதீவு நாடாளுமன்றத்திலும் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் தலைமையிலான தூதுக்குழுவில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், வஜிர அபேவர்தன, மற்றும் தயா கமகே, இராஜாங்க அமைச்சர் அனோமா கமகே, பிரதமர் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் பிரதமரின் ஆலோசகர் சுதர்ஷன குணவர்தன ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.