நடுவானில் பற்ரி எரிந்த ஹெலிகாப்டர்! இசை நிகழ்ச்சிக்கு சென்றோருக்கு ஏற்பட்ட பரிதாபம்!

நோர்வேயில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நோர்வேயின் ஆல்டா நகருக்கு அருகே ஹாட்ஸ்ப்ரேல் என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அங்கு வரும் ரசிகர்களுக்கு இலவச ஹெலிகாப்டர் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சிக்கு வந்து செல்வோருக்காக இந்த சேவையை ஹெலிட்ரான்ஸ் (Helitrans) நிறுவனத்துடன் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்திருந்தனர்.

இதில் ஒரு ஹெலிகாப்டரில் ரசிகர்கள் வந்தபோது நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைவதற்கு ஒரு சில கிலோ மீட்டரே இருந்த நிலையில் அந்த ஹெலிகாப்டரில் தீப்பிடித்து எரிந்தது.

இதில் மொத்தம் 6 பேர் பயணித்த நிலையில், 4 பேர் உயிரிழந்தனர். காயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டபோதும்,காணாமல் போன மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.

விபத்துக்கான காரணமும், அதில் பயணித்தோரின் விவரங்களும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், ஹாட்ஸ்ப்ரெல் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.