வெளிநாட்டில் கணவன்… மனைவி செய்த துரோகம்!

வெளிநாட்டில் கணவன் இருக்கும் நிலையில், காதலனுக்காக மனைவி குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மதுரை மாவட்டம் அடுத்த மேலூரைச் சேர்ந்தவர் ராகவநத்தம். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

ராகவநத்தம் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பார்கவி , யுவராஜா ஆகியோர் திடீரென்று இறந்து கிடந்தனர்.

இதனால் இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதோடு, வெளிநாட்டில் இருக்கும் ராகவந்ததிற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தன் மனைவி மீது சந்தேகம் இருப்பதாகவும், ராகவந்தம் கூறியுள்ளார். இதலா பொலிசார் மேற்கொண்டு வந்த தொடர் விசாரணையில், ரஞ்சிதாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த கல்யாணகுமார் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக இது தொடர்பாக பொலிசார் மேற்கொண்டு வந்த கிடுக்குப்பிடி விசாரணையில், ரஞ்சிதாவில் பதிலளிக்க முடியாததால், இறுதியாக அவர் காதலன் கல்யாணகுமாரோடு சேர்ந்து விஷம் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் .

இதையடுத்து ரஞ்சிதாவையும் அவரது காதலன் கல்யாணகுமாரையும் 3 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.