வனிதாவின் அடுத்த டார்கெட் இவர்தான்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 50 நாட்கள் கடந்த மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 16 போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனை தொடர்ந்து வனிதாவின் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு பிக்பாஸ் வீட்டில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இல்லமல் போகிறது. இதன் விளைவாக நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கடந்த இரண்டு வாரம் முழுவதும் சண்டையாக சென்ற பிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சி தகவல் பார்வையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு மதுமிதா பிக்பாஸ் வீட்டில் வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து, சென்ற வார எலிமினேஷனில் அபிராமி வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் அபிராமியிடம் செய்த அதே வேலையை தற்போது வனிதா ஷெரினிடம் தொடங்கியுள்ளார். ஷெரினை, தர்ஷனிடம் இருந்து விலகி இருக்கும்படி அவருக்கும் அறிவுரை கூறுகிறார் வனிதா. ஒரே பெட்டில் ஷெரினுடன் படுத்துக்கொண்டு அவருக்கு ஆறுதல் சொல்வது போல் தர்ஷன் குறித்து கொளுத்தி போடுகிறார

ஏற்கனவே ஷெரின் வனிதாவுடன் நெருக்கமாக இருப்பது தர்ஷனுக்கு பிடிக்கவில்லை. வனிதா ஒரு வத்திக்குச்சி, கொளுத்தி போடுவார் என்பது தர்ஷனுக்கு நன்றாகவே தெரியும். அடுத்த சண்டை ஷெரினுக்கும், தர்ஷனுக்கு தான்.