கையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்..!!

திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், வெளி மாநில மதுபானங்களை விற்பனை செய்த திமுக பிரமுகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் – மங்கலம் ரோட்டில் உள்ள சோதனைசாவடியில் காவல் துறையினர் வாகன சோதனை செய்த பொது அந்த வழியாக திமுக கொடியுடன் வந்த காரை சோதனை செய்தனர்.

சோதனையின் பொது அந்த காரின் பின்பக்க சீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கண்டெடுக்க பட்டுள்ளது. அதில் 50 கிலோவும், 35க்கும் மேற்பட்ட வெளி மாநில மதுபான பாட்டில்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அதை கொண்டுவந்த திமுக பிரமுகர் சதீஸ்குமார் மற்றும் ஞானபிரகாஷ் இருவரையும் திருப்பூர் மத்திய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் ரொக்கம், 2 செல்போன்கள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.