விவாதத்தின் நடுவே குழந்தைக்கு பால் ஊட்டிய சபாநாயகர்!!

நியூசிலாந்தில் தொழிலாளர் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் டமாடி கோபி. ஓரின சேர்க்கையாளரான இவர் டிம் ஸ்மித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஜூலை மாதம் வாடகை தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஸ்மித் கோபி என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், டமாடி கோபி பேறுகால விடுமுறைக்கு பின், நேற்று முன்தினம் தனது குழந்தையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்தார். அப்போது சபையில் நடந்த விவாதம் ஒன்றில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது சபாநாயகர் டிரவர் மல்லார்ட், டமாடி கோபியிடம் இருந்து குழந்தையை வாங்கி தனது மடியில் வைத்து கொண்டு சபையை நடத்தினார். பின்னர் அவர் குழந்தைக்கு பாட்டிலில் பாலூட்டினார்.

இதுகுறித்து, டிரவர் மல்லார்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறியிருப்பதாவது, பொதுவாக சபாநாயகர் இருக்கை என்பது அவையை நடத்துபவர்களுக்கு உரியது. ஆனால் இன்று ஒரு மிக முக்கியமான மனிதர் என்னுடன் இந்த நாற்காலியை பகிர்ந்து கொள்கிறார். எம்.பி டமாடி கோபி-டிம் ஸ்மித் இருவருக்கும் உங்களது குடும்பத்தின் புதிய வரவுக்காக மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற சபாநாயகர் டிரவர் மல்லார்ட்டின் இந்த செயலுக்கு நியூசிலாந்து மக்களிடம் பாராட்டு குவிகிறது.