வாழ்க்கையில் இதெல்லாம் கூடவே கூடாது.!

வாழ்க்கை தத்துவங்கள்:

மகன் தந்தையின் கண்ணீரை பார்க்கக்கூடாது.

பெற்ற பிள்ளைகளின் அவப்பெயரை தாய் கேட்கக்கூடாது.

சகோதரர் உடன்பிறப்புகளிடம் அந்தஸ்து காட்டக்கூடாது.

தம்பதிகளுக்கிடையே சந்தேகம் இருக்கக்கூடாது.

வெற்றியாளர்களுக்கு இறுமாப்பு இருக்கக்கூடாது.

தலைவனுக்கு நொடிப்பொழுது சபலமும் கூடாது.

வாழ்ந்து கெட்டவனின் வறுமையை தூற்றக்கூடாது.

பகைவனாக இருந்தாலும் ஒருவரின் இறப்பில் மகிழக்கூடாது.

கடும்பசியிலும் மதியாதவர் வீட்டில் உணவு உண்ணக்கூடாது.

தர்மம் செய்பவரை தடுக்கக்கூடாது.

பணம், பொருள் என இந்த இரண்டுமே வாழ்க்கையில் மனிதனின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் குணத்தையே மாற்றும் வல்லமை படைத்தது.

பகையை வளர்க்காமல் எல்லோரிடமும் பொறுத்து போகிறவர்களுக்கே இங்கு கோமாளி, முட்டாள், பிழைக்க தெரியாதவன் என்ற பெயர் கிடைக்கிறது.