குழந்தையின்மை பிரச்னையை போக்க வேண்டுமா?

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் இல்லை என்பது ஒரு குடும்பப் பிரச்னையாகவும், சமூகப் பிரச்னையாகவும் உள்ளது.

இதனை பல தம்பதியினர் பெரும் கஷ்டப்பட்டு கொண்டு உள்ளனர்.

மனஅழுத்தம், மரபியல், ஹார்மோன் குறைபாடுகள் ஆகிய பல்வேறு காரணங்களால் குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக பெண்கள் கர்ப்பம் தரிக்காததற்கு முக்கியக் காரணங்களாக கருமுட்டை முதிர்ச்சியடைந்து சூலகத்திலிருந்து வெளியேறாதது, நீர்க்கட்டிகள் (பாலிசிஸ்டிக் ஓவரீஸ்), நார்த்திசுக் கட்டிகள் (ஃபைப்ராய்ட்ஸ்), கர்ப்பப்பையின் சதையில் உருவாகும் கட்டிகள் போன்றவை அமைகின்றது.

இதனை எளிய வைத்தியமுறைகள் மூலம் சரி செய்ய முடியும். தற்போது அது என்ன என்பதை பார்ப்போம்.

 • தாம்பத்தியத்திற்கு பின் அடி வயிறு குத்தல், வலி இருந்தால் கருப்பையில் தசை வளர்ந்துள்ளது என்று பொருள். மிளகு, சீரகம் இரண்டையும் கடுகெண்ணெய் விட்டு அரைத்து விலக்கான நாட்களில் சாப்பிடவும்.
 • தாம்பத்தியத்திற்கு பின் உடல் நடுங்கி மயக்கம் வந்தால் கருப்பை ஜவ்வு தடித்திருக்கும். பெருங்காயத்துடன் நல்லெண்ணெய் சேர்த்தரைத்து விலக்கான நாட்களில் சாப்பிட கொடுக்க குழந்தை உண்டாகும்.
 • தாம்பத்தியத்திற்கு பின் குளிரும், சுரமும் இருந்தால் வாயு. இதற்கு கோழிப்பித்து, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்து புசி தாம்பத்தியம் கொள்ள சரியாகும் வேறு சில மருத்துவ குறிப்புகளும் உள்ளன.
 • கல்யாண முருங்கைப் பவுடருடன் மிளகு சேர்த்தரைத்து புளியங்கொட்டை அளவு இருவேளை 5 நாட்கள் சாப்பிடவும். 5 நாள் இடைவெளி விட்டு மீண்டும் 5 நாள் சாப்பிட கருப்பை கோளாறுகள் நீங்கி கரு நிற்கும்.
 • அசோகுப்பட்டை, மாதுளை வேர்ப்பட்டை, மாதுளம் பழ ஓடு சமன் எடுத்து பொடி செய்து 3 சிட்டிகை காலை மாலை வெந்நீரில் 3-4 மாதம் கொடுத்து வர மலடு தீரும்.
 • இலந்தையிலை 1 பிடி, மிளகு 6, புண்டுபல் 4 அரைத்து விலக்கான 3 நாள் கொடுத்து வர கருப்பை குறைகள் நீங்கி குழந்தை உண்டாகும்.
 • மாதுளை வேர்ப்பட்டை, மரப்பட்டை, விதை சமன் சுரணம் செய்து 3 கிராம் காலை மாலை வெந்நீரில் கொடுக்க கர்ப்பம் தரிக்கும்.
 • சித்தாமணக்கெண்ணையில் மஞ்சனத்தி இலைசாறு கலந்து கொடுக்க கரு நிற்கும்.
 • அரை விராகன் எடை வால்மிளகு, 1 விராகன் எடை கற்கண்டு சேர்த்தரைத்து 7நாள் கொடுக்கலாம்.
 • பொன்னாவரை விதையை பசும்பாலில் போட்டு காய்ச்சி 8 நாள் குடிக்க கர்ப்பம் தரிக்கும்.
 • மிளகு, புண்டு, ஆண்வசம்பு , வேப்பங்கொழுந்து நான்கையும் அரைத்து விலக்கான மூன்று நாளும் மூன்று மாதங்களுக்கு கொடுக்க குழந்தை பேறு கிட்டும்.