காதலித்து கொண்டிருக்கும் பெண்களே உஷார்.!

உங்களிடம் முதன் முறை புதிதாக அறிமுகமாகும் ஒரு நபரை நீங்கள் ஓரளவு தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் குறைந்தபட்சம் இரண்டு மாதம் ஆகும். அந்த இரண்டு மாதத்திற்குள் அவரை முழுமையாக கணித்துவிட முடியாது. ஏதேனும் ஒரு வகையில் அவரது விருப்பு, வெறுப்பு எந்த மாதிரியானது என்பதை சிறிது நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு மனிதனின் பலவீனம் என்பது எப்போதாவது தான் வெளிப்படும். அதுவரை ஒவ்வொரு மனிதரும் ஒரு பொய்யான தோற்றத்திலேயே புன்னகையை ஓடவிட்டு வாழ்ந்து கொண்டிருப்பார். சில பெண்கள் எளிதாக காதல் வலையில் விழுந்து விடுவர். காரணம், காதலனாக இருப்பவன் அழகாக, எளிதில் கவரும் தோற்றம் உடையவனாக இருக்க வேண்டும் என்பதே.

சுமார் நான்கு மாத நட்பில் இருக்கும் சில பெண்களிடம், ‘உங்களுடைய பாய் பிரண்ட் யார்? எந்த ஊர்? அவரது பெற்றோர் எங்கிருக்கிறார்? அவரின் குடும்ப பின்னணி என்ன?’ என்பது குறித்து கேட்டு பாருங்கள். பல பெண்களுக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியாது. டிப்டாப்பாக இருக்கும் இளைஞர்கள் நல்லவர்களாக தான் இருப்பார்கள் என்ற எண்ணம் பொதுவாக பெண்களிடம் இருக்கின்றது.

இந்த எண்ணம் தான் நட்பை தாண்டி, காதல் வரை கொண்டு போகின்றது. இந்த காதலானது உச்சகட்டத்தை அடையும் பட்சத்தில், ஒரு அறையில் அந்தப் பெண்ணுடன் இருக்கும் அவன், அடுத்த கட்டத்தில் அந்த சூழலையும், அந்த இடத்தையும் அப்படியே விட்டுவிட்டு அடுத்த ஒரு அப்பாவியை குறி வைக்கத் துவங்கி விடுகின்றான். அவனால் ஏமாற்றப்பட்ட பெண்ணும், மனதிற்குள் அவனை திட்டியபடியே வெளியில் கூற முடியாமல், பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட தயாராகி விடுகிறாள். ஆனால், இப்படி ஏமாறும் பெண்கள் ஒரு சிலர் தான்.

பெரும்பாலான பெண்கள் இந்த விஷயத்தில் சற்று உஷாராக தான் இருக்கின்றனர். வலிய தேடி வரும் பல இளைஞர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். தங்களுடைய நட்பு கூடாரத்தில் அவ்வளவு எளிதில் யாரையும் அவர்கள் சேர்ப்பதில்லை. அப்படியே அவர்களது அப்புரோச் பிடித்து இருந்தாலும் கூட, சில மாதங்கள் டீலில் விட்டு, விட்டு அதன் பிறகே ஹாய் ஹலோ என பேசவே வருகின்றனர்.

இதற்கு அவசரம் காட்டும் பல இளைஞர்கள் அவர்களது அவசரத்திற்கு பலியாகும் வேறு சில பெண்களை தேடி சென்று விடுகின்றனர். இப்பொழுது பெண்கள் ஆண்களை புரிந்து கொள்ள செல்போன்கள் மிகப்பெரிய அளவில் உதவுகின்றது. அதே நேரத்தில் அந்த செல்போன் தான் பெண்களை அதிக அளவு பாதிக்கிறது என்பது மிகையாகாது.

இரவு, பகல் பாராமல் அந்த நபருடன் நீங்கள் உரையாடும் பொழுது அவரது பலவீனங்களை ஏதாவது ஒன்றை அவ்வப்போது வெளிப்படுத்துகின்றனர். சிறிய விஷயங்களை வைத்தே பெரிய விஷயங்களை கணித்து புத்திசாலித்தனமாக பல பெண்கள் சூழ்நிலையை புரிந்து கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.
பெண்களே உஷார்.!