சக கிரிக்கெட் வீரங்கனையை மணந்த அழகான பிரபல வீராங்கனை கர்ப்பம்!

சக கிரிக்கெட் அணி வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் தலைவி சட்டர்த்வெய்ட் கர்ப்பம் ஆகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி அமெ சட்டர்த்வெய்ட் (32)

நியூசிலாந்து அணிக்காக 12 ஆண்டுகளாக விளையாடி வரும் சட்டர்த்வெய்ட் 119 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6 சதம், 21 அரை சதங்கள் உள்பட 3,821 ஓட்டங்களும், 99 டி20 ஆட்டங்களில் ஆடி 1,526 ஓட்டங்களும் சேர்த்துள்ளார்.

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசிய ஒரே வீராங்கனை இவர் தான்.

தன்பாலின ஈர்ப்பு கொண்ட சட்டர்த்வெய்ட், அணியின் சக வீராங்கனையும், வேகப்பந்து வீச்சாளருமான 28 வயதான லியா தாஹூஹூவுடன் நெருங்கிப் பழகினார்.

ஒன்றாக வசித்து வந்த இவர்கள் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சட்டர்த்வெய்ட் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களது வாழ்வின் புதிய அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் உண்டு.

சக வீராங்கனையை கரம்பிடித்த சட்டர்த்வெய்ட் எந்த முறையில் கர்ப்பம் ஆனார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.