குப்பை தொட்டியிலிருந்து மீட்டவர்களை தேடும் பெண்!

தன்னைப் பெற்றவர்கள் தன்னைக் குப்பைத் தொட்டியில் வீசிச் செல்ல, அதிலிருந்து தன்னை மீட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு நன்றி கூறுவதற்காக அவர்களை தேடுகிறார் ஒரு பெண்.

ஜார்ஜியாவைச் சேர்ந்த Amanda Jo Jones (36) தான் குழந்தையாக இருந்தபோது தன்னை குப்பைத்தொட்டியிலிருந்து மீட்டவர்களை கண்டுபிடிக்க உதவுமாறு பேஸ்புக்கில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

1983ஆம் ஆண்டு ஜனவரி மாதம் Amandaவைப் பெற்றவர்கள் அவரை ஒரு கம்பளியில் சுற்றி, அட்லாண்டாவிலுள்ள ஒரு குப்பைத்தொட்டியில் போட்டுச் சென்றார்கள்.

அவரை மீட்ட யாரோ, அவரை Northside மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

அங்கு நர்ஸ்கள் அவருக்கு Jan Winter என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதாவது அவர் கண்டுபிடிக்கப்பட்ட ஜனவரி மாதம் மற்றும் குளிர்காலம் என்பதையே அவருக்கு பெயராக வைத்திருக்கிறார்கள்.

Amandaவுக்கு மூன்று வயது இருக்கும்போது Kay மற்றும் Wayne என்னும் தம்பதியர், அவருடன் Stephanie என்ற பெண் குழந்தையையும் சேர்த்து தத்தெடுத்து வளர்த்திருக்கிறார்கள்.

பின்னர் DNA பரிசோதனை மற்றும் துப்பறிவாளர்கள் உதவியுடன் தன்னைப் பெற்றவர்களைக் கண்டுபிடித்திருக்கிறார் Amanda.

அவர்களைக் கண்டுபிடித்துவிட்ட நிலையிலும், அவர்கள் 36 ஆண்டுகளாக இப்படி ஒரு ரகசியத்தை மறைத்து வைத்துக் கொண்டு என்ன பாடுபடுகிறார்களோ, பாவம், அவர்களை நான் மன்னித்துவிட்டேன் என்கிறார்.

அவரது கவலையெல்லாம், தன்னை குப்பைத்தொட்டியில்லிருந்து மீட்டவர் அல்லது மீட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதுதான்.

எனவேதான் தான் குழந்தையாக கண்டுபிடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படத்தையும் வெளியிட்டு பேஸ்புக்கில் உதவி கோரியிருக்கிறார் Amanda.

என்னை கண்டுபிடித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும் என்று கூறும் Amanda, அவர்கள் என்னை சரியான நேரத்தில் மீட்டதன் மூலம், பலருக்கு நன்மை செய்திருக்கிறார்கள் என்கிறார்.