வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்த சந்திராயன்-2..!!

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய ஆய்வு மையத்தால் கடந்த ஜூலை 22ம் தேதி அனுப்புவைக்க பட்டது சந்திராயன் 2 செயற்கைக்கோள். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்ட சந்திராயன்-ll , 14.08.2019 அன்று அதிகாலையில் பூமியை விட்டு வெளியேறி, நிலவை நோக்கி பயணம் செய்ய தொடங்கியது.

நிலவை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்னையை அடுத்து உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை உடைய சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு சேர்த்தது.

அப்போது ராக்கெட்டிலிருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகாமையில் குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவில், மற்றும் அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றியே வந்தது. அதன்பின்னர் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சந்திரயானின் சுற்றுப்பாதை கொஞ்சம் கொஞ்சமாக 5 முறை உயிர்த்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.

இவ்வாறு சந்திரயான்-2 நீள்வட்ட பாதையில் தனது வேகத்தை உயர்த்தி பூமியைவிட்டு படி படியாக நகர்ந்து தொலைவில் சென்ற நிலையில், ஆகஸ்ட் 14ம் தேதி அதிகாலை 2.21 மணிக்கு 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாறியது. சந்திரயான்-2 பயணம் இதற்காக சந்திரயானில் உள்ள திரவ எஞ்சின் 1203 நொடிகள் இயக்கப்பட்டது.

இதையடுத்து பூமியின் சுற்றுவட்டப் பாதையைவிட்டு சந்திராயன்-2 வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது. பின்னர் நிலவை நோக்கி திசை மாற்றப்பட்டது. நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திரயான்-2, இன்னும் 6 நாட்களில் (ஆகஸ்ட் 20-ம் தேதி) நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன்பின் அதன் வேகம் படி படியாக குறைக்கப்பட்டு செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்க பட்டது.

அதன்படி புவி வட்டப் பகுதியை விட்டு வெளியேறிய சந்திராயன் 2 செயற்கைக்கோளானது எதிர் பார்த்தபடி இன்று காலை 09.30 மணிக்கு நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது.

மேலும் திட்டமிட்ட படியே நடந்துகொண்டிருக்கிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருப்பது சந்திராயன் 2வின் வெற்றி நெருங்கி கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.