விடுமுறைக்கு இலங்கை சென்ற பெண்ணிற்கு காத்திருந்த பெரும் சோகம்!

கடந்த மாதம் 29 ஆம் திகதி மதவாச்சியில் பாரிய விபத்து ஒன்று நிகழ்ந்தது.

ஜேர்மனியில் இருந்து விடுமுறையில் வந்த குடும்பம் ஒன்றே இந்த விபத்தில் சிக்கியிருந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்து சிகிற்சை பெற்றுவந்த திருமதி. சத்தியா செல்வரஞ்சன் என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி மரணமானார்.

mulheim Germany ஐ வதிவிடமாகவும் கொண்ட இவர் நல்லூர் வடக்கை பிறப்பிடமாக கொண்டவராவார்.

இதேவேளை கடந்த மாதம் இடம்பெற்ற கோரவிபத்தில் விபத்தில் இவரது மகன், தாயார், மற்றும் சகோதரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.