நள்ளிரவிலேயே அபிராமியை பிக்பாஸை விட்டு வெளியே துரத்திய போட்டியாளர்கள்!

பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார் அபிராமி. இவர் வெளியேற போவது பிக்பாஸ் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் என்பதால் பெரியளவில் யாருக்கும் ஷாக் இல்லை.

ஆனால் இவரை வந்த புதியதில் அதாவது பிக்பாஸ் ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே வீட்டை விட்டு வெளியேற போட்டியாளர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

அபிராமி வெளியேறியதற்கு முந்தைய வாரம் எலிமினேட் ஆன சாக்‌ஷி இதுபற்றி கூறுகையில், அபிராமி கொஞ்சம் சுயநலமா இருந்தாங்க. ஆனா நாங்க எல்லாரும் அவருக்கு சப்போர்ட் பண்ணோம். வனிதா அக்கா, சரவணன், சேரன் அண்ணா அண்ட் பாத்திமா பாபு இவங்க எல்லாம் பெரியங்க. இவங்களாம் என்ன சொன்னாங்கன்னா, இந்த செகண்டே அபிராமி வெளியே போனோம்னு சொன்னாங்க. இது எல்லாம் நைட் 3, 4 மணிக்கு நடக்குது. ஆனால் இதையெல்லாம் பிக்பாஸ் காட்டல. அப்போ அபிராமி உடல்ரீதியா வேற பாதிக்கப்பட்டிருந்தாங்க என கூறினார்.

ஆனால் அது எப்படிப்பட்ட உடல்ரீதியா என்பதை கூற மறுத்துவிட்டார்.