மீண்டும் ஒரு தற்கொலை ???

100 நாட்கள் நடைபெறும், பிக்பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது 50 நாட்களை கடந்து நடைபெற்று வருகின்றது. இந்த பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் கவின், அபிராமி, லாஸ்லியா, மதுமிதா மற்றும் முகின் ஆகியோர் இடம் பெற்று இருக்கின்றனர். இவர்களில் இந்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என்று பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், எதிர்பாராத நேரத்தில் நடிகை மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார்.

நடிகை மதுமிதா பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதன் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. அதனை நிரூபிக்கும் வகையில் நடிகை மதுமிதா தனது கையில் கட்டுடன் கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.

கேப்டனாக இருக்கும் நிலையில் தற்போது, மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பது. காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுபோலவே முன்னதாக நடிகை ஓவியா பிக்பாஸ் ஒன்றாம் சீசனில் நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.