மந்திரவாதியின் பேச்சை கேட்டு நடுவீட்டில் பொலிஸாரின் மனைவி செய்த காரியம்!

சென்னையில் ஓய்வு பெற்ற தலைமைக்காவலரின் மனைவி நடுவீட்டில் 21 அடி ஆழத்தில் குழி தோண்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமைக்காவலர் ராஜா என்பவரின் மனைவி மைதிலி. சில நாட்களாகவே இவர்களுடைய வீட்டிற்கு வெளியில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், உள்ளே குழி தோண்டும் சத்தம் கேட்பதாகவும் பொலிஸாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் ஆய்வு மேற்கொண்ட போது, வீட்டிற்கு நடுவில் 21 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதும், அதிலிருந்த மணலை மூட்டையாக அங்கு கட்டி வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து மைதிலியிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, குடும்பத்தில் பல இழப்புகள் நிகழ்ந்ததாலும் தன்னுடைய கணவர் ராஜா பக்கவாதத்தில் இருந்ததால் மந்திரவாதி சுரேஷ் என்பவரை மைதிலி அணுகியுள்ளார்.

அவர், வீட்டினுள் செய்வினை வைக்கப்பட்டிருப்பதாவதும், அதனை வெளியில் தோண்டி எடுக்குமாறு மைதிலிக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனை நம்பிய மைதிலியும் ஆள் வைத்து குழி தோண்டும் போது, உள்ளிருந்து கயிறு மற்றும் பொம்மையை எடுத்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக மைதிலி மணல் திருட்டில் ஈடுபடவில்லை என்பதும், மணல் மூட்டைகளை பாதுகாப்போடு வைத்திருந்ததும் தெரியவந்தது.

பின்னர் பொலிஸார் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், மைதிலியிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.