கனடாவில் காணாமல் போன சிறுமியின் நிலை?

கனடாவின் டொரண்டோவில் பத்து வயது சிறுமி காணாமல் போனதாக பொலிசார் அறிவித்த நிலையில் அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

டொரண்டோ பொலிசார் 17ஆம் திகதி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் ஜிசிலி Jiselle Banchon-Loayza என்ற பத்து வயது சிறுமி காணாமல் போயுள்ளதாக அவரின் புகைப்படத்துடன் பதிவிட்டனர்.

மேலும் சிறுமி அணிந்திருந்த உடையின் நிறம், அவர் தலைமுடி நிறம் மற்றும் கண்ணாடி குறித்த தகவல்களும் தெரிவிக்கப்பட்டது.

இதோடு சிறுமி யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அது குறித்து தெரிவிக்கலாம் என ஒரு போன் நம்பரையும் பொலிசார் வெளியிட்டனர்.

இந்த பதிவை அதிகம் பேர் பகிர்ந்தனர். இந்நிலையில் சிறுமி Jiselle பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இத்தகவலை டொரண்டோ பொலிசார் தெரிவித்துள்ளனர், இதை தொடர்ந்து டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் பலர் சிறுமி பத்திரமாக கிடைத்து விட்டாள், கடவுளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளனர்.