16 வயது சிறுமியை பலமுறை வன்கொடுமை செய்த காம கொடூரன்கள்…!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் உள்ள நாரேல் பகுதியை சார்ந்த இடத்தில் 17 வயதுடைய சிறுமி தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில்., பணியை முடித்துவிட்டு தூங்கிக்கொண்டு இருந்தார். இந்த நிலையில்., சிறுமி தூங்கிக்கொண்டு இருந்த சமயத்தில் பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்., இந்த விஷயம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர்., சிறுமியின் தரப்பில் கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதியன்று அதிகாலை 2 மணியளவில் நடந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதுமட்டுமல்லாது குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவரின் பெயர் பூர்சிங் வேதா என்பதும்., மற்றொருவர் இராஜஸ்தானை சார்ந்தவன் என்பதும் தெரியவந்தது. மேலும்., இராஜஸ்தானை சார்ந்த காம கொடூரன் விபத்தில் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுமி கடந்த ஒருமாத காலமாக அகமதாபாத்தில் வேலை தேடி வந்த நிலையில்., சிறுமி கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வரும் சமயத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும்., சிறுமி இது குறித்து தனது மாமாவிடம் கண்ணீரில் தெரிவித்ததை அடுத்து., சிறுமியின் மாமா புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் குற்றவாளி தலைமறைவாக உள்ள நிலையில்., குற்றவாளியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.