லாஸ்லியா இராவணன் போன்றவர் ,, பிக்பாஸில் விமர்சித்த வனிதா…

பிக்பாஸ் போட்டியாளராக வந்த முதல் நாளே அதிக ரசிகர்களை ஈர்த்தவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது பிக்பாஸ் வந்துள்ளார்.

சில நாட்கள் முன்பு பிக்பாஸ் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த கஸ்தூரி லாஸ்லியாவை டார்கெட் செய்தார். இந்நிலையில் இன்று பிக்பாஸ் விருந்தினராக வந்த வனிதவும் லாஸ்லியாவை டார்கெட் செய்து பேசியுள்ளார். “லாஸ்லியாவுக்கு ராவணன் போல பல முகங்களை இருக்கு. அதை நிச்சயம் தெரிந்துகொள்ளவேண்டும். விடாமல் துரத்துங்கள்” என கஸ்தூரியை பார்த்து வனிதா கூறியுள்ளார்.