திருமண வீட்டை சூழ்ந்த வெள்ளம்.. பின் நடந்த சுவாரஷ்யம்!

கேரளா மாநிலத்தில் திருமண வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் மணமகளை மணமகன் சுமந்து செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தென்மேற்கு பருவமழையின் காரணமாக கேரளா மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. மண் சரிவுகளும் சில பகுதிகளில் நிகழ்ந்துள்ளதால் உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது.

மீட்பு படை வீரர்களும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதுடன், மண்ணில் புதைந்தவர்களின் சடலங்களையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் திருமணம் நடைபெற்ற வீடு ஒன்றினை வெள்ளம் முழுவதும் சூழ்ந்துள்ளது. இதனால் மணப்பெண்ணை, தன்னுடைய கைகளில் மணமகன் சுமந்து சென்றுள்ளார்.

இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.