இனி இலங்கைக்கு நல்ல நேரம் தான்.. ஜம்பவான் சங்கக்காரா

லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடந்த எம்சிசி உலக கிரிக்கெட் குழு கூட்டத்தில், 2020 மார்ச் மாதம் இலங்கைக்கான இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உலகக் கிரிக்கெட் குழு திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஜம்பவான் சங்கக்காரா கூறியுள்ளார்.

லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடந்த எம்சிசி உலக கிரிக்கெட் குழு கூட்டம் ஆகத்து 13 மற்றும் 14ம் திகதி நடைபெற்றது.

இதில் கலந்துக்கொண்ட எம்.சி.சி.யின் தலைவராக நியமிக்கப்பட்ட குமார் சங்கக்காரா கூறியதாவது: ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை போன்ற துயர சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் இலங்கை போன்ற நாடுகளில் கிரிக்கெட்டை ஆதரிப்பது மிகவும் முக்கியமானது.

ஒரு நாட்டை ஒன்றிணைக்கும் சக்தி கிரிக்கெட்டுக்கு உண்டு, இங்கிலாந்து சுற்றுப்பயணம் ரசிகர்களுக்கு கொண்டாட ஒரு பெரிய தருணத்தை கொடுக்கும்.

இலங்கை பார்வையிட ஒரு அழகான நாடு மற்றும் உலகின் சிறந்த கிரிக்கெட் இடங்களுள் ஒன்றாகும். ஒட்டுமொத்த நாட்டிலும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்படும் தாக்கம் மகத்தானதாக இருக்கும். சமீபத்தில் சுற்றுப்பயணம் செய்த வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்தை வரவேற்பது சிறப்பானது.

உலகக் கிரிக்கெட் குழு தனது அடுத்த கூட்டத்தை இலங்கையில் 2020 மார்ச் மாதம் நடத்த விரும்புகிறது என கூறினார்.