அபிராமியை முகினுக்கு எதிராகத் திருப்பிவிட்ட வனிதா.!

நேற்று பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது வெளியாகி உள்ள பிரோமோவில் அபிராமியை முகினுக்கு எதிராக திருப்பும் முயற்சியில் வனிதா ஈடுபட்ட காட்சி இடம்பெற்றுள்ளது.

பிரோமோவில் நீ ஏன் முகின் பின்னாடி ஓடிக்கொண்டே இருக்க, கடைசியில் அவன் ஹீரோவாகி ஹீரோவாயிட்டான், நீ ஜீரோவாயிட்டனு என்று அபிராமியிடம் வனிதா கூறுகிறார்.

நீ என்னடா என்ன லவ் பண்றது, நீ தேவையில்லன்னு தூக்கி போட்டுட்டு போ, முகின் துர்கா பற்றி உன் கிட்ட சொல்லி இருக்கான்னு கேட்டார் வனிதா, அதற்கு அபிராமி இல்லை என்று கூறினார். இந்த உரையாடல் மூலம் வனிதா அபிராமியை முகினுக்கு எதிராக திசை திருப்புவது போன்று உள்ளது.