கொள்ளையர்களை செருப்பால் அடித்து விரட்டிய வயதான தம்பதியினர்.!

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் கிராமத்தில், விவசாயி சண்முகவேலு இரவு நேரத்தில் தனது வீட்டில் வெளியே அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது கொள்ளையர்கள் இருவர் முகமூடி அணிந்துகொண்டு, ஆயுதங்களை கையில் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.

அதில் ஒரு கொள்ளையர் முதியவர் சண்முகத்தை கழுத்தை துணியால் நெரித்துள்ளார். அப்போது கீழே விழுந்த முதியவர் புரண்டு எழுந்து கொள்ளையர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டார். சத்தம் கேட்டு சண்முகவேலூவின் மனைவியை செந்தாமரை வீட்டில் இருந்து வெளியே வந்து கொள்ளையர்களுடன் கணவன் போராடிக் கொண்டிருந்த கண்டு கையில் கிடைத்த நாற்காலி, செருப்பு போன்ற பொருட்களை வீசினர்.

இதற்கு இடையே கொள்ளையர்கள் ஒருவர், செந்தாமரை அணிந்து நான்கு சவரன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர். கடைசி வரை போராடி அவர்களை மடக்கிப் பிடிக்க முதியவர்கள் முயன்றனர். ஒரு வழியாக இறுதியில் கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். தற்போது அவர்கள் போராடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.