நரகத்தில் வாழ்வதாக கண்கலங்கிய நடிகை.. ரஜினி செய்த செயல்..

தமிழில் கடந்த 2001 ஆம் ஆண்டு விஜய் மற்றும் சூர்யா நடித்து வெளியான வெற்றிப் படம் ப்ரெண்ட்ஸ். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி.

இவர், படங்களில் சரியாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சீரியல்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது அந்த வாய்ப்புகளுக்கும் இல்லாத நிலையில் கஷ்டப்பட்டு வருவதாக கூறி நீங்கள் தான் எனது தாயார் மற்றும் சகோதரிக்கு உதவ வேண்டும் என அந்த வீடியோவில் விஜயலட்சுமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள விஜயலட்சுமி, ரஜினி சார் என்னிடம் பேசினார் என்று கூறியுள்ளார்.

மேலும், ரஜினி சார் என்னுடைய பிரச்சனைகளை பொறுமையாக கேட்டு அன்பாகவும், மனிதாபிமானத்துடனும், பேசியவர் என் பிரச்சனைகளை சரி செய்வதாகவும் கூறினார்.

அவருக்கு நன்றிகள் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. அவர் மீது எனக்கு இருந்த மரியாதை நூறு மடங்காகி விட்டது என அவர் உருக்கமாக பேசியுள்ளார்.