சுரேஷ் ரெய்னா மருத்துவமனையில்! BCCI வெளியிட்ட புகைப்படம்!

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவர் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த சுரேஷ் ரெய்னா. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன இவர் மிக சிறப்பாக விளையாடி வந்த நிலையில், பார்ம் இல்லாமல் தவிக்க அவரை அணியில் இருந்து கழட்டி விட்டனர்.

தற்பொழுது ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவ்வப்பொழுது தேசிய அணியில் இடம் பிடித்தாலும் அவருடைய இடத்தினை நிரந்தரமாக்க முடியாமல் தடுமாறி வருகிறார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி உள்ளார். ஆனால் அண்மைகாலமாக முழங்கால் வலி பிரச்சினையில் சிக்கித் தவித்து வந்துள்ளார்.

கடந்த வருடம் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடியது இந்திய அணிக்காக அவர் விளையாடிய இறுதி தொடர் ஆகும். அதன் பிறகு உள்ளூர் தொடர் மற்றும் இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த நிலையில் அவர் முழங்கால் அறுவை சிகிச்சை செய்வதற்கு முடிவெடுத்து தற்போது முழங்காலுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இந்த அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் அவர்கள் நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் அவர் அதுவரை கிரிக்கெட் விளையாட முடியாது எனவும், அவர் விரைவாக குணமடைய வாழ்த்துவதாக பிசிசிஐ தரப்பில் அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு டுவிட் செய்யப்பட்டுள்ளது. சுரேஷ் ரெய்னா மருத்துமனையில் இருப்பதால் இந்த வருடம் உள்நாட்டு கிரிக்கெட் தொடரின் ஆரம்ப போட்டிகளில் அவரால் விளையாட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த பீல்டர்களில் ஒருவரான, மேலும் இந்தியாவில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு பீல்டிங்கில் உற்சாகமாக இருந்தவரும், என் நண்பருமான சுரேஷ் ரெய்னா மிக விரைவில் குணமடைய வேண்டுமென உலகின் தலைசிறந்த பில்டராக விளங்கிய தென்னாபிரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.