தலைவலியை ஏற்படுத்திய அம்புக்குறியின் வீடியோ வைரல்!

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில், அம்புக்குறி ஒன்று குறிப்பிட்ட திசைக்கு திரும்ப மறுப்பது நெட்டிசன்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்: நெட்டிசன்கள் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் உலா வரும் கேள்விகளுக்கும், வித்தியாசமான வீடியோக்களுக்கும் பதில் அளிப்பது வழக்கமான ஒன்று.

அதே சமயம் சில வீடியோக்களையும், கேள்விகளையும் எத்தனை முறை பார்த்தாலும் புரிந்துக் கொள்வது கடினமான ஒன்றாகி விடுகிறது.

அந்த வகையில் அம்புக்குறி ஒன்று வலது புறமாகவும், இடது புறமாகவும் சுற்றப்படும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களுக்கு தலைவலி ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

இந்த வீடியோவில் அம்புக்குறி ஒன்று இரு புறமும் திருப்பப்படுகிறது. ஆனால், அந்த அம்புக்குறியின் கூரிய முனை இடது புறம் காட்டாமல் எப்போதும் வலது புறமே இருக்கிறது.

இது எப்படி என அனைத்து நெட்டிசன்களும் திரும்ப திரும்ப பார்த்து குழம்பியுள்ளனர். இதனை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

இதனை பதிவு செய்த கைய், 3டி தொழில்நுட்பம் மூலம் கணிதவியலாளரும் சிற்பியுமான கோகிச்சி சுகிஹாரா தனது கைகளால் பல நுணுக்கமான வளைவுகளால் உருவாக்கியது.  நம் மூளையால் அதனை பதிவு செய்ய முடியாது என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.