அதிரடியாக கேள்வி கேட்ட லொஸ்லியா! காதல் பற்றி மனம் திறந்த கமல்!

பிரபல டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி, மக்களை தன் வசம் நன்றாக கட்டிப்போட்டு, இங்கு அங்கு நகர விடாமல் செய்கிறது.

அதுவும், சனி ஞாயிறுகளில் வெளியில் சென்று இருப்பவர்கள் கூட அவசரமாக வீடு திரும்பி விடுகிறார்கள்.

அன்று நம்மவர், உலக நாயகன் கமல்ஹாசன் பஞ்சாயத்து பண்ண வந்துருவாரே.. அதைப் பார்க்காமல் இருக்க முடியுமா என்ன?

இன்று லொஸ்லியா நிஜ திரிஷாவாக மாறி கமலையே கேள்வி கேட்கின்றார். கமலும் அழகான அனுபவங்களை லொஸ்லியாவுடன் பகிர்ந்து கொள்ளுகின்றார்.

கமலின் சாமத்தியமான பதிலால் அரங்கமே சிரித்துள்ளது. அதனை பார்த்த லொஸ்லியாவும் உடனே வெட்கப்பட்டு சிரிக்கின்றார்.