சிங்கத்துடன் சண்டையிட்டு குழந்தையை காப்பாற்றிய தாய்!

உலகில் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் அதே சமயம், மனிதர்களிடையே அன்பு, பாசம் நாளுக்கு நாள் குறைந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.

அதை உணர்த்தும் வகையில் சமூக வலைதளங்களில் தாய் பெற்ற குழந்தையை அடித்து துன்புறுத்தும், சில சம்பவங்களில் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாக தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில், தாய்மையை போற்றும் வகையில் இணையத்தில் வரிக்குதிரையின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில், வரிக்குதிரைகள் விரட்டி வரும் சிங்கத்தை பார்த்து ஓட, வரிக்குதிரை குட்டி ஒன்றை சிங்கம் பாய்ந்து பிடித்து விடுகிறது.

பின்னர், வரிக்குதிரை குட்டியை கழுத்தை பிடித்த சிங்கம், அதை தூக்கிச் செல்ல முயல, குட்டியை காப்பாற்ற தாய் வரிக்குதிரை ஓடி வந்து நிற்கிறது. இதனையடுத்து, சிங்கத்தை தாய் வரிக்குதிரை முட்டி தள்ள, வாயில் கடித்துக்கொண்டிருந்த குட்டியை விட்டு விட்டு சிங்கம் ஓடுகிறது.

சிங்கத்தின் பிடியிலிருந்து தப்பித்த குட்டி, தனது தாயுடன் தப்பிச் செல்கிறது. குறித்த வீடியோவை கண்ட பலர் இது ஆச்சரியமாளிக்கும் வகையில் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.