இன்றைய ராசிபலன் (31/07/2019)

 • மேஷம்

  மேஷம்: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டா கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் வேலைகளை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். உயர்வு பெறும் நாள்.

 • ரிஷபம்

  ரிஷபம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந் தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். நினைத்தது முடியும் நாள்.

 • மிதுனம்

  மிதுனம்: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண் டாம். பிற்பகல் முதல் குடும்பத் தில் அமைதி நிலவும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மனநிறைவு கிட்டும் நாள்.

 • கடகம்

  கடகம்: காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவ தால் மனஉளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபா ரத்தில் புதிய முயற்சியை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும்.

 • சிம்மம்

  சிம்மம்:  ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்கக் கூடும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.

 • கன்னி

  கன்னி: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பிள்ளை களின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். காணாமல் போன  முக்கிய  ஆவணம் கிடைக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். சிறப்பான நாள்.

 • துலாம்

  துலாம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். நம்பிக்கைக் குரியவரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

 • விருச்சிகம்

  விருச்சிகம்: காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துப் போகும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணி களை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.

 • தனுசு

  தனுசு: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச் சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில்
  வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

 • மகரம்

  மகரம்: கடினமான காரியங் களையும் எளிதாக முடிப்பீர் கள். சகோதர வகையில் ஒற் றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அறிவு திறன் வளரும் நாள்.

 • கும்பம்

  கும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். சிறப்பான நாள்.

 • மீனம்

  மீனம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். உறவினர் களின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.