வேறு பெண்ணைப் பார்த்த காதலன் ! மண்டையை உடைத்த காதலி ! – வீடியோ

காதலி மீது காதலனும், காதலன் மீது காதலியும் ஒருவருக்கொருவர் அதீத உரிமையுடன் இருப்பது இருபது சகஜம்.
இந்த இருவருக்கிடையேயான அன்பில், பெண்கள் தங்கள் காதலன் மீது அதிக அன்பு பாராட்டுவது இயல்புதான். இது எல்லை மீறும் போதுதான் பிரச்சனையே ஆரம்பமாகிறது.

தற்போது அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒருகாதல் ஜோடி, மியாமியிலிருந்து லாஸ் ஏஞ்செல்ஸுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான  நிலையத்தில் சென்றுள்ளனர்.

விமான இருக்கைகள் காதலன் அமர்ந்திருக்கும் போது, எதிர்ப்புறம் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை பார்த்துள்ளார். இதில் கடுப்பான காதலி தன், காதலனை கெட்டவார்த்தைகளால் திட்டி, அடித்துள்ளார்.
பின்னர் எல்லோர் முன்னிலையிலும் காதலி அடித்ததால் விமானத்தை விட்டு கீழே இறங்க காதலன் முயன்றுள்ளார்.
அப்போது ஆவேசம் அடைந்த காதலி, தன் லேப்டாப்பை எடுத்து காதலன் மண்டையில் ஓங்கி அடித்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.