சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழங்களே தொடக்கூடாதா?

உலகில் உள்ள கொடிய நோய்களுள் சக்கரை நோயும் ஒன்றாக கருதப்படுகின்றது.

இன்று பெரும்பாலும் சர்க்கரை நோய். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் பாகு பாடில்லாமல் நிலவுகிறது.

அதுமட்டுமின்றி இதற்கு வாழ்வியல் முறைகள், மரபு வழிக்காரணங்கள் என பல கூறப்படுகிறது.

சக்கரை நோய் வந்து விட்டாலே போதும் உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது ஆகும்.

அதில் சிலர் சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழங்களே தொடக்கூடாது என்றும் கூறுவார்கள்.

உண்மையில் பழங்களில் உள்ள இனிப்பு நார்சத்துடன் கூடிய நீரில் கரையாத இனிப்பு, அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை ஏற்றாது.

அந்தவகையில் சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா? என இங்கு பார்ப்போம்.

  • நாம் சாப்பிடும் பீர்க்கங்காய், புடலை, பூசணி, சுரைக்காய் போன்றவை “லோகிளை சீமிக்” உணவுகள். இவற்றை அதிகமாக உண்ணலாம்.
  • அதே போல கொய்யா, சப்போட்டா, பப்பாளி, தர்பூசணி, கிர்னி, நாவல்பழம், பன்னீர் திராட்சை, பச்சை திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற அனைத்து வகை பழங்களும் 50 (அ) 60 கிராம் வரை ஒரு நாளில் ஒரு வேளை உண்ணலாம்.
  • காலை 11 மணி (அ) மாலை 4-5 மணியளவில் பழங்களை சாப்பிடுவது சிறந்தது. ஏனென்றால் இந்த உணவு இடைவெளியின் பொழுது, உடலுக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது, அதே நேரத்தில் சர்க்கரை அதிக மாகவும் கூடாது.
  • மா, பலா, வாழை போன்ற முக்கனிகளும் கூட கட்டாயம் சாப்பிடலாம். ஆனால் அளவு என்பது முக்கியமாக கவனிக்க வேண்டும்.