சாதாரண உடையில் குத்தாட்டம் போட்ட பெண் பொலிஸ்!

காவல்நிலையத்தில் நடனமாடிய பெண் காவலரின் டிக் டாக் வீடியோ வைரல் ஆனதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியான ஒரு வீடியோவில் குஜராத்தை சேர்ந்த அபூர்வா சவுத்திரி என்ற பெண் காவலர் மெஹசானா காவல்நிலையத்திற்குள் சாதாரண உடைகள் அணிந்து நடனமாடுவது பதிவாகியிருந்தது.

குற்றவாளிகள் அடைத்து வைத்திருக்கப்படும் காவல் நிலையத்தில் சமூகப் பொறுப்பில்லாமல் நடனமாடிய பெண் போலீசுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.