முகேன் ராவுக்கு இவ்வளவு அழகான குடும்பமா!

தமிழ் பிக்பாஸின் தற்போதைய மூன்றாவது சீசனில் மலேசியா நாட்டில் இருந்து கலந்து கொண்டிருப்பவர் முகேன் ராவ். மாடலிங் துறையை சேர்ந்தவரான இவரது நடிப்பில் பல ஆல்பம் பாடல்கள் வெளிவந்து பல தரப்பட்ட ரசிகர்களை பெற்றுள்ளது.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் இவரது திறமையை வெளிப்படுத்தும் வண்ணம் இன்னும் எந்த டாஸ்க்கும் வரவில்லை. அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையீடாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கும் இவரை குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

இப்படி இருக்கையில் இவரை பற்றி எதாவது ஒரு தகவல் கிடைத்துவிடாதா? என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அலசி ஆராய்ந்து வருகின்றனர். இந்நிலையில் நமது தளத்திற்கு இவரது குடும்ப உறுப்பினர்களின் சில புகைப்படங்கள் கிடைத்துள்ளன.