பிகில் படத்திற்காக மெர்சல் பட தயாரிப்பாளர் ட்விட்!

விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. மெர்சல் படத்திற்கு பிறகு அட்லீ இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு நயன்தாரா நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து சிங்கப்பெண்ணே பாடல் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் சூறையாடி வருகிறது.

பெண்களின் வாழ்க்கையை குறித்து பாடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ரசிகர்களை தாண்டி சினிமா பிரபலங்களும் வாழ்த்து கூறிவரும் நிலையில் விஜய்- அட்லீ கூட்டணியில் உருவான மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி இப்பாடலை பாராட்டி பிகில் பட போட்டோவுடன் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.