இவரெல்லாம் இராணுவத்துக்கா? டோனியை கிண்டல் செய்த இங்கிலாந்து முன்னாள் வீரர்!

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனி, இரண்டு மாதம் நான் தொடரில் பங்கேற்கவில்லை, இராணுவத்தில் பணியாற்ற போகிறேன் என்று டோனி தெரிவித்த நிலையில், அதை கிண்டல் செய்யும் விதமாக இங்கிலாந்து வீரர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில், டோனியின் செயல்பாடு அந்தளவிற்கு திருப்தி இல்லாமல் இருந்ததால், அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

ஆனால் டோனி இதைப் பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் தான் அவர் சமீபத்தில் பிசிசிஐக்கு எழுதியிருந்த கடிதத்தில், தான் அடுத்த இரண்டு மாதத்திற்க் இராணுவத்தில் பணியாற்றப்போவதாக குறிப்பிட்டிருந்தார்.

இதனால் வரும் மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான தொடரில் அவர் எடுக்கப்படவில்லை. இந்த தகவல் வெளியானவுடனே அனைத்து செய்தி சேனல்களும் செய்தியாக வெளியிட்டிருந்தன.

அப்படி ஒரு பிரபல விளையாட்டு ஊடகம் ஒன்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், டோனியின் இந்த முடிவைப் பற்றி பதிவேற்றம் செய்ய, உடனே இதைக் கண்ட இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் லாய்டு சிரிக்கும் எமோஜியுடன் பதிவிட்டு டோனியை கிண்டல் செய்துள்ளார்.