தோனி இந்த போட்டி வரை விளையாடுவர் – பயிற்சியாளர்

உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்குப் பின் தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு துணை ராணுவப் படையில் பணியாற்ற உள்ள உள்ளதால் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் என்னால் பங்கேற்க முடியாது என பிசிசிஐ-க்கு தோனி கடிதம் மூலம் தெரிவித்தார்.

மேலும், தோனியின் ஓய்வு பற்றி கருத்து தெரிவித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், ஓய்வு குறித்து முடிவெடுக்க வேண்டியது தோனி தான் எனவும், அவர் எதிர்கால திட்டம் குறித்து தோனியிடம் கலந்து ஆலோசிப்போம் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், தோனியின் ஓய்வு குறித்து அவரது இளம் வயது பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி பேசுகையில், சிறுவயதில் இருந்தே தோனியை பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் இப்போதும் அவர் முழு உடல் தகுதியுடன் தான் உள்ளார். அவர் எப்போது ஓய்வு பெறுவார் என அவரின் நெருங்கிய நண்பர்களுக்கே தெரியாது ஏன் எனக்கும் கூட தெரியாது. இன்றும் முழு உடல் தகுதியுடன் கிரிக்கெட்டை நேசித்து விளையாடி வருகிறார்.

தோனியிடமிருந்தே முழு அளவில் எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது. அவர் மீதான அழுத்தத்தை குறைக்க வேண்டும் எல்லா தொடரிலும் அவரையே விளையாட வைக்காமல் முக்கியமான தொடர்பில் மட்டுமே அவரை பங்கேற்க வைக்க வேண்டும். தோனி மீதான அழுத்தம் குறைக்கப்பட்டால் அவர் அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை போட்டி வரை அவர் விளையாடுவார் என கேசவ் பானர்ஜி தெரிவித்தார்.