இந்திய அணியில் மீண்டும் ஒரு அண்ணன் தம்பி!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸக்கு சுற்று பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் என மூன்று வகையான கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்கவுள்ளன.

இந்திய ஒருநாள் அணியில், விராட் கோலி (கேப்டன்) , ரோகித் சர்மா, கேஎல் ராகுல், தவான், மணிஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடோஜா, ரிஷாப் பண்ட, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், நவதீப் சைனி, கலீல் அகமது, கெதர் ஜாதவ், முகம்மது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்த தொடருக்கான இருபது ஓவர் போட்டிக்கான அணியில், “விராட் கோலி (கேப்டன்) , ரோகித் சர்மா, கேஎல் ராகுல், தவான், மணிஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடோஜா, ரிஷப் பாண்ட் , புவனேஸ்வர் குமார், நவதீப் சைனி, கலீல் அகமது, வாஷிங்டன் சுந்தர், க்ருனால் பாண்டியா, ராகுல் சாஹர், தீபக் சாஹர் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்திய அணியில் அமர்நாத் சகோதரர்களுக்கு பிறகு பதான் சகோதரர்கள் இணைந்து விளையாடினார்கள். அதற்கடுத்து தற்போது பாண்டியா சகோதரர்கள் இணைந்து விளையாடி வருகிறார்கள். இதில் ஹர்டிக் பாண்டியா காயத்தினால் அணியில் சேர்க்கப்படவில்லை.
க்ருனால் பாண்டியா மட்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

தற்போது அணியில் புதிய அண்ணன் தம்பி இணைந்துள்ளார்கள். சென்னை அணிக்காக ஆடிவரும் தீபக் சாஹரும், மும்பை அணிக்காக ஆடிவரும் ராகுல் சாஹரும் T20 அணிக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.