யாருக்கும் தெரியாமல், மனைவியை தன்னுடன் தங்க வைத்த கிரிக்கெட் வீரர்.!

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறி சென்று அரையிறுதியில் நியூசிலாந்துடன் விளையாடி தோல்வியை கண்டு ஆட்டத்தில் இருந்து விலகியது.

இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட்டின் பொழுது இந்திய வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் 15 நாட்கள் தங்கி கொள்ள கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அனுமதி அளித்திருந்தது.

ஆனால் அனுமதியை மீறி மூத்த வீரர் ஒருவர் உலகக்கோப்பை போட்டி நடந்த 7 வாரமும் தனது மனைவியை அவருடன் தங்க வைத்திருந்த வைத்திருந்ததாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் வாரியத்தின் விதியை மீறியதால் கிரிக்கெட் வாரியம் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி ஆணையர் நிர்வாக மேலாளர் சுனில் சுப்பிரமணியத்திடம் விளக்கம் கேட்க முடிவு எடுத்துள்ளது. உலக கோப்பை குறித்து ஏற்கனவே விசாரணை நடத்த தயாராகி இருந்தது பிசிசிஐ நிர்வாக குழு. தற்போது இந்த விவகாரம் அத்துடன் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.