மனைவி, கொழுந்தியாளுடன் குஜாலாக இருந்த நண்பன்.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் பகுதியை சார்ந்தவர் கோகுல கண்ணன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் தங்கியிருந்து மாற வேலை செய்யும் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வீட்டில் இரத்த வெள்ளத்தில் மயங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து., மருத்துவமணையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விசயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., இது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட நிலையில்., இந்த கொலை நடைபெற்ற நாளன்று அவரது நண்பரான சுரேஷ் என்பவர் மாயமாகியதும்., இதனால் சுரேஷ் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகித்து., சுரேஷை காவல் துறையினர் தேடி வந்த நிலையில்., நேற்று சுரேஷை காவல் துறையினர் கைது செய்து மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர் கோகுல கண்ணனை – சுரேஷ் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பான விசாரணையில்., நான் கட்டிட பணியாளராக பணியாற்றி வருகிறேன். நான் பணியாற்றும் வீட்டில் கண்ணன் ஜன்னல்., கதவுகள் அமைக்கும் பணியை செய்து வந்தார். இந்த சமயத்தில் எங்களுக்குள் நட்பு., நாங்கள் இருவரும் ஒன்றாக மது அருந்தி வந்தோம். எங்களின் நட்பு நெருக்கமானதை அடுத்து., எனது இல்லத்திற்கு அடிக்கடி வருகை தரும் வழக்கத்தை கோகுல கண்ணன் வைத்திருந்தார். இந்த நேரத்தில்., எனது மனைவி மற்றும் மனைவியின் தங்கையிடம் சிரித்து பேசி வந்தார்.

இதனால் எனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தை அடுத்து., எனது மனைவியின் மீது சந்தேகித்து அவரிடம் நடத்தை குறித்து கேட்டதால்., அவர் கோபமடைந்து தனது தாயரின் இல்லத்திற்கு சென்றுவிட்டார். இதனால் தனிமையில் தவித்து வந்த நான் மற்றும் எனது மற்றொரு நண்பர் மணிகண்டன் என்பவருடன் சேர்ந்து மது அருந்திய நிலையில்., போதை ஏறியதால் மணிகண்டன் அவரின் இல்லத்திற்கு சென்றுவிட்டார். பின்னர் ஆத்திரத்தில் இருந்த நான் கோகுல கண்ணனின் இல்லத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டேன்.

இந்த சமயத்தில்., எனக்கும் – கோகுல கண்ணனிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து வீட்டில் இருந்த கட்டையால் கோகுல கண்ணனின் மண்டையில் பலமாக அடித்ததால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். சிறிது நேரம் கழித்து எதுவும் தெரியாதது போல சென்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து சுரேஷை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.