ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் வாய்ப்பு!!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸக்கு சுற்று பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் என மூன்று வகை கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்கவுள்ளன.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 தொடர் வருகின்ற ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக கோலியே மீண்டும் தேர்வு மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற உள்ள இந்திய வீரர்களின் பட்டியல் பிசிசிஐ அதிகார்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்:-

விராட் கோலி (கேப்டன்) , ரோகித் சர்மா, மயங்ப் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல், கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடோஜா, இஷாந்த் சர்மா, அஸ்வின், வ்ரிதிமான் சஹா, குல்தீப் யாதவ், மொஹமத் ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்.

அஸ்வின் உள்ளிட்ட வீரர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.