இலங்கையில் வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி! இப்படியுமா ஏமாத்துவீங்க?

இலங்கைக்கு ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஒருவர் சுற்றிலா வந்துள்ளார். இங்கு அவர் சில உடைகளை வாங்கலாம் என நினைத்து ஒரு கடை தெருவுக்கு சென்றுள்ளார்.

அவருக்கு சிங்களம், தமிழ் தெரியாது என்பதால் பல கடைகளில் அவர் பேச முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். கடைசியில் ஆங்கிலம் நன்றாக பேசும் நபர் ஒருவர் தன்னுடைய கடைக்கு வருமாறு அவரை அழைத்து சில ஆடைகளை (டீ – சர்ட்) காட்டுயுள்ளார்.

மிகவும் விலை குறைந்த, சில நூறு ருபாய் மட்டுமே மதிப்புள்ள அந்த துணியினை ஏமாற்றி அந்த வெளிநாட்டு காரருக்கு 6500 ரூபாய்க்கு விற்க முயல்கிறார் அந்த ஏமாற்று பேர்வழி.

குறித்த வெளிநாட்டவர் இது அநியாய விலை என புரிந்துகொண்ட அங்கிருந்து வெளியேற முயல்கிறார், அந்த கடைக்காரர் கடைசியாக 3500 ரூபாய்க்கு தருவதாக கூறுகிறார். அதுவும் வேண்டாம் என முடிவெடுத்து கிளப்பி செல்கிறார் அந்த சுற்றுலா பயணி.