ஆடையில்லாமல் அலையும் பெண்ணின் ஆடைக்கான தேடல்…!

ஆடை…. நடிகை அமலாபால் நடிப்புல வெளியான திரைப்படம் தான் ஆடை.. இந்த படத்தின் இயக்குனர் இரத்தின குமார். இந்த படத்தை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் “பெண்களுக்கு கொடுத்த சுதந்திரத்தை., அதிகளவு உபயோகம்செய்யாதீர்கள்” அவ்வுளவுதான்.. இனி படத்திற்குள் போகலாம்….

படத்தின் துவக்கத்தில் ஆதிக்க ஜாதி – அடிமை ஜாதி என்று துவங்கி., நாகர்கோவில் – கன்னியாகுமரி – கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நடந்த பெண்கள் மார்பகத்தை மறைக்க கூடாது பிரச்சனையை சொல்லி இருந்தார்கள்.. இந்த பிரச்சனையில் அவர்ங்களின் கூற்றுப்படி நாம் கவனித்தாலும் சில உண்மைகள் இருப்பது தெரியும்..

ஒரு பெண் மார்பகத்தை எல்லாருக்கும் தெரியும் படி காமிக்க முடியாது., நான் மேல் ஆடை ஆணிவேன் என்று பெண்ணொருவர் சொல்ல., அந்த பெண்கிட்ட அரச அதிகாரிகள் அத்துமீறுவதும்., அந்த பெண் தன்னோட மார்பகத்தை அறுத்து வாழை இலையில் வைத்து., துடிதுடித்து இறந்துவிடுவதும்., கணவன் உடன் கட்டை ஏறி உயிரையும் மாய்துகொள்கிறார்.

இந்த இடத்தில் நாம் ஒன்று தெரிஞ்சுக்கணும்.. உயிரை விட்ட குடும்பம் ஒன்று – பெண்ணியவாதி என்ற பெயரை வாங்கி சமுதாயத்தை சீரழித்தது மற்றொருவன்.. இப்படி மக்களை ஏமாற்றிய நபர்கள் அதிகம்.. அந்த பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பம் யார் என்பது அந்த கிராம மக்களுக்குத்தான் தெரியும் என்று படத்தில் உள்ளது உண்மை தான்..

இந்த படத்தின் முழு விமர்சனத்தை கீழுள்ள வீடியோ பதிவில் காணவும்…