மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணியின் உத்தேச பட்டியல்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 தொடர் வருகின்ற ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்திய அணியின் அனுபவமிக்க வீரரான தோனி இந்த தொடரில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஐபிஎல் உலக கோப்பை தொடர் என இந்திய இளம் வீரர்கள் தொடர்ந்து விளையாடி வருவதால் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. தோனிக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கலாம் என கூறப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

மேலும் புவனேஷ் குமார், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஒய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என்றும் தோனிக்கு தொடரில் இடம் இல்லை என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ள இந்திய வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் உத்தேச பட்டியல்:

விராட் கோலி (கேப்டன்)

ரோகித் சர்மா

கேஎல் ராகுல்

மணிஷ் பாண்டே

ஸ்ரேயஸ் ஐயர்

சுபமன் கில்

ரிஷாப் பண்ட

க்ருனால் பாண்டியா

குல்தீப் யாதவ்

ஸ்ரேயஸ் கோபால்

நவதீப் சைனி

கலீல் அகமது

ஆவேஷ் கான்