ஒரு வருடத்திற்கு தோணி தான் கேப்டன்.! அறிவித்த தலைமை செயல் அதிகாரி.!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான, தோனி ஓய்வு பெற உள்ளதாக சில தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடுவாரா அல்லது அந்த அணியின் கேப்டன் மாற்றப்படுமா என தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி தன்னுடைய அதிரடியான ஆட்டம் மற்றும் சிறப்பான கேப்டன்ஷிப்பினால் பலரது மனங்களை கவர்ந்தவர் கூறப்படுகிறார். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவருக்கு தமிழகம் உட்பட, தென் இந்தியாவில் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

இந்நிலையில் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற உள்ளதாக சில தகவல்கள் பரவி வருகிறது. இதனால், தோனியை ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் நீடிப்பாரா? என சென்னை ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் கிரிக்கெட் விளையாடும் மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது.

அந்த நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன் அவர்கள், கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம், பேசிய பொழுது “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் ஒப்பந்தம் முடிய இன்னும் ஒரு வருடம் மீதம் உள்ளது. அது வரை அவர்தான் கேப்டன். ஓய்வு குறித்து தோனி எதுவும் கூறவில்லை.” என அவர் தெரிவித்துள்ளார்.