சர்ச்சை பிரபலத்தை சோகத்தில் ஆழ்த்திய மரணம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இளம் ரசிகர்கள் வட்டாரத்தை அதிகம் இந்நிகழ்ச்சி பெற்றுள்ளது.

ஹிந்தியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தய சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாடகர் அனுப் ஜலோதா. இவரால் சில சர்ச்சைகளும் எழுந்தது.

தற்போது அவரின் தன் அம்மாவை இழந்த சோகத்தில் மூழ்கியுள்ளார். அவரின் தாய் கமலா தன் 85 வது வயதில் உடல் நலக்குறைவால் மும்பை ஹிந்துஜா மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார்.

அவரின் தாயார் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.