விக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக வெளியிட்ட புகைப்படம்!!

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது
ஊரறிந்த விஷயம். அவர்கள் எப்போது திருமணம் செய்வார்கள் என்ற கேள்விக்கு
இதுவரை பதில் யாருக்கும் தெரியவில்லை.

அந்த அளவுக்கு மில்லியன் டாலர்
கேள்வியாக உள்ளது அது. மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் எடுக்கும்
புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை தொடர்ந்து
அள்ளிவருகிறார் என்பதும் தெரியும்.

இந்நிலையில் தற்போது நயந்தாரா
சூரியனோடு இருக்கும் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன் அது பற்றி
ரொமான்டிக்காக பதிவிட்டுள்ளார். “அழகிய சூரியனும் அவள் விரல் தொட்டு
விளையாட ஆசைப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார் அவர்.