கண்ணீர் விட்டு அழுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!!

நாம் பிறக்கும் போதே அழுதுகொண்டு தான் பிறப்போம்.. தாயின் கருவறையில் இருந்து வெளியேறி வந்ததும் நாம் கேட்கும் முதல் சத்தம் தாயின் வலிக்கான கண்ணீரும்., நமது அழுகையின் குரலும் தான். பொதுவாக அழுகை என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு என்று இருந்து வருகிறது.

இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் முதலில் செய்யும் ஒரு விஷயம் என்னவென்றால் அது அழுகை தான். இந்த அழுகைக்கும் உடல் நலத்திற்கும் இணைப்பு உள்ளதாகவும்., இதற்கு மருத்துவ முறையில் நல்ல தீர்வு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்திக்கான முழு வீடியோ பதிவு:

கண்டிப்பாக வாரத்திற்கு மூன்று நாட்கள் கட்டாயம் அழ வேண்டும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஜப்பான் நாட்டை பொறுத்த வரையில் ஆண்கள் மற்றும் பெண்கள் நாளொன்றுக்கு சுமார் 20 விழுக்காடு அளவிலான பணியாற்றும் மக்கள் கூடுதல் பணி செய்கின்றனர்.

இதன் காரணமாக அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியும் வருகின்றனர். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தை சரி செய்ய., மருத்துவரிடம் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதற்கான சரியான சிகிச்சையாக அழுகையை பரிந்துரை செய்து வருகின்றனர்.